வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சரினால் வவுனியாவில் திறக்கப்பட்டுள்ள கட்சி

Report Print Theesan in அரசியல்

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட கட்சி காரியாலயம் வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா - மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று காலை கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிறிதரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சி.வி.விக்னேஷ்வரன் வவுனியா - தாண்டிக்குளம் முருகன் கோவிலில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டதையடுத்து, மன்னார் வீதி வழியாக கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ம.தியாகராஜா, கட்சியின் யாழ், வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், சிறி மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers