ராஜபக்சவினரை பழிவாங்கவே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது!

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜபக்சவினரை பழிவாங்கவே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வேகமாக நாட்டின் முதலாவது அரசியல் சக்தியாக குறுகிய காலத்தில் பொதுஜன பெரமுன உருவெடுத்துள்ளது. நாங்கள் கட்சியை ஆரம்பிக்கும் போது பல சவால்கள் வந்தன. ஒரு புறம் நாங்கள் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்திருந்தோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து விட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்க, டி.ஏ.ராஜபக்சவின் பஞ்சமா சக்தியை கைவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின்னர், மகிந்த ராஜபக்ச உட்பட அரசியல் சக்திகள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்தன. அப்போது தனியான கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தோம்.

புதிய கட்சியை ஆரம்பித்தால், வீதியில் நடக்க வைத்து விடுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிடம் பகிரங்கமாக கூறினார். நாங்கள் நடந்தோம். தேர்தல் ஒன்றை கோரி, கண்டியில் இருந்து கொழும்புக்கு நடந்து வந்தோம்.

வீதியில் நடப்பது எமக்கு பெரிய வேலையல்ல. நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்தே ராஜபக்சவினரை பழிவாங்கும் வேலையையே செய்தது. இதற்காக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers