கோத்தபாய போட்டியிட்டால் ஐ.தே.கட்சிக்கு இலகுவான வெற்றி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டாலும் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியால் இலகுவாக தோற்கடிக்க கூடிய ஒரே நபர் கோத்தபாய ராஜபக்ச எனவும் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்று அவரை தோற்கடித்து, மீண்டும் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி பெற முடியும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers