வாக்களிக்கும் போது வேட்பாளரின் வரலாற்றை தேடிப்பார்க்க வேண்டும் - திலும் அமுனுகம

Report Print Steephen Steephen in அரசியல்

வீட்டுக்கு நாய் குட்டி ஒன்றை வாங்கும் போது, குட்டியின் தாய், தந்தை, அதன் இனம் என்பவற்றை தேடுகிறோம். எனினும் நாட்டின் ஆட்சியாளரை, நாட்டின் தலைவரை தெரிவு செய்ய வாக்களிக்கும் போது, அவரது தற்போதைய செயற்பாடுகள், வரலாறு குறித்து தேடிப்பார்ப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அக்மீமன தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணியை ஆரம்பித்து வைக்கும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இளைஞர்களின் வாக்குகளாயே நாங்கள் 2015 ஆம் தோல்வியடைந்தோம். வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளால் தோற்றதாக சிலர் கூறுகின்றனர். அது தவறு.

இளைஞர்கள் எமக்கு எதிராக இருந்தனர். பெற்றோர் எமக்கு வாக்களித்த போது, அவர்களின் பிள்ளைகள் எமக்கு வாக்களிக்கவில்லை.

எனினும் தற்போது அவர்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது. தனது 21வது வயதில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளார்.

இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினார். பட்டதாரிளுக்கும் வேலை வாய்ப்பை வழங்கினார். துறைமுகத்தை நிர்மாணித்தார்.

விமான நிலையத்தை நிர்மாணித்தார். நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை இல்லாதொழித்தார். எனினும் 2015ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர் அன்றும் எந்த வேலைகளையும் செய்யவில்லை, கடந்த நான்கரை ஆண்டுகளும் எதனையும் செய்யவில்லை.

நாட்டுக்கு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வைத்தவரையே பேஸ்புக் மூலம் இளைஞர், யுவதிகளே தோற்கடித்தனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், இருந்த இரண்டு தரப்புக்கும் வேறுபாடுகள் இல்லை என சிலர் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 பேரும் தவறானவர்கள் என்ற கருத்தும் தற்போது இருக்கின்றது. நாம் வாக்களிக்க செல்லும் போது நாட்டை ஆட்சி செய்தவர்களின் வரலாறை தேடிப்பார்க்க வேண்டும்.

இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers