மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்! சற்று முன் அறிவிப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவே என சற்று முன் அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் 3 மணியளவில் ஆரம்பமாகியது.

இதன் போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் புதிய தலைவராக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் தவிசாளர் ஜீ. எல். பீரிஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதனையடுத்து கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Latest Offers