கொழும்பில் மஹிந்தவின் அறிவிப்பு! வடக்கில் சரமாரியாக வெடித்த பட்டாசுகள்

Report Print Sujitha Sri in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட நிலையில் வடக்கில் சரமாரியாக பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெடி கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், மலையகத்தின் அநேகமான பகுதிகளில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து பகிர்ந்துண்டு சந்தோசத்தை பகிர்ந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு, சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்சவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers