அனைத்து பிரஜைகளினதும் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படும்: கோத்தபாய

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால எமது அரசாங்கத்தின் கீழ் சுற்றுச் சுழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அனைத்து இளைஞர் யுவதிகளும் கல்வியைத் தொடர்வததற்கு இடைவிலகிச் செல்லாது தொழில்நுட்பம் சார் பயிற்சிகள் உள்ளிட்டன வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கையின் கீழ் புத்தாக்க முயற்சிகளுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்படும்.

உலகின் புத்தாக்க முயற்சிகளில் முதனிலை நாடாக எமது நாட்டை உருவாக்குவதே எமது நீண்ட கால இலக்காக அமைய வேண்டும்.

அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு நாட்டின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும.

உள்நாட்டு பொருளாதாரத்தை பாதுகாத்து உலக பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் நலனை உறுதி செய்யக்கூடிய அரச சேவையொன்றை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்க அதிகாரிகள் அரசியல் தலையீடுகள் அழுத்தங்களிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்.

சுயாதீனமான அடிப்படையில் சரியான முறையில் தீர்மானங்களை எடுக்கும் அரச அதிகாரிகளை உச்ச அளவில் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரச நிறுவனங்களில் ஈ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் நகரங்களைத் தேடி வருவதனை விடவும் அந்த சந்தர்ப்பங்களை நாம் மக்களுக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம்.

நீர், வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் நகரங்களுக்கு மட்டுமான அபிவிருத்தி கிராமங்கள் நோக்கி நகர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் அன்று ஆரம்பித்த நகர அலங்கார செயற்திட்டங்கள் நாடு முழுவதிலும் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இயற்கை காடுகள் மீளவும் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊனமுற்ற படைவீரர்கள், விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers