பாலில் பொரித்தாலும் எண்ணெயில் பொரித்தாலும் கட்டுப்புறா கழுகாக மாறாது! ராஜபக்சாக்கள் குறித்து ரணில் கிண்டல்

Report Print Steephen Steephen in அரசியல்

10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ராஜபக்ச ஆட்சியாளர்களுக்கு நாட்டை முன்னேற்ற முடியாது போனதாகவும் தற்போது புதிய உடை மற்றும் வர்ணத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் வந்தாலும் பழைய முறைமையே நடைமுறையில் இருக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாலில் பொரித்தாலும் எண்ணெயில் பொரித்தாலும் காட்டுப் புறா, காட்டுப் புறாவே அன்றி அது கழுகாக மாறாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

குருணாகலில் இன்று நடைபெற்ற பயிர்கள் அழிவடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பல வருடங்களாக அழிந்து போயிருந்த நாட்டை பல்வேறு சவால்களுக்கு மத்தியல் கட்டியெழுப்பி, நாட்டு மக்கள் அனைவரும் வலுவான எதிர்காலத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தது.

இந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று, முன்னேறிய நாடாக இலங்கையை மாற்றுவதா அல்லது அழிவான காலத்திற்குள் நாட்டை தள்ளி விடுவதா என்பதை தீர்மானிக்கும் காலம் வந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது. பெயரை மாற்றிக்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வரும் அவர்களால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியுமா என நான் கேள்வி எழுப்புகிறேன். போர் முடிவடைந்த பின்னர் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கு பதிலாக பல பிரச்சினைகள் உருவாகின. எனினும் சகல சவால்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்குள் நாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி முன்னோக்கி சென்றோம்.

ராஜபக்சவின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இலங்கையின் ஏற்றுமதி 30 வீதத்தில் இருந்து 18 வீதமாக குறைந்தது. ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டது. உலகத்திற்கு மத்தியில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டது. எனினும் இந்த 5 ஆண்டுகளில் அனைத்தையும் மீண்டும் கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல முடிந்தது.

ராஜபக்சவின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நீதிமன்ற சுதந்திரத் ஆட்சியாளர்களாக பாதுகாக்க முடியாது போனது. ஊடக சுதந்திரம் இருக்கவில்லை. ஜனநாயகம் பாதுகாக்கப்படவில்லை. நாட்டில் வெள்ளை வான் கலாசாரம் இருந்தது. அனைத்து விடயங்களிலும் நாடு சீரழிந்து காணப்பட்டது. சுகாதாரம், கல்விக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

மீண்டும் இப்படியான அழிவான யுகத்தை நோக்கி பயணிப்பதா அல்லது கடந்த 5ஆண்டுகளில் மேற்கொண்டு வந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று நாட்டை முன்னேற்றி, எதிர்காலத்தை கட்டியெழுப்புவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers