முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனு கட்சியின் மாநாடு தொடர்பில் பலர் வருத்ததத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மாநாட்டில் முக்கியஸ்தர்கள் பலருக்கு அழைப்பு விடுக்காமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் ஆசன வசதி 5000 பேருக்கு மாத்திரமே உள்ளது.
இதன் காரணமாகவே பலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் பொது மக்கள் பிரதிநிதிகள் மாத்திரம் அழைக்கப்பட்டதாகவும், இதற்கு மேலதிகமாக சகோதர கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமே அழைப்பு கிடைத்துள்ளதாக கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்