ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து வெற்றியீட்ட முடியாது – அர்ஜூன ரணதுங்க

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து வெற்றியீட்ட முடியாது. எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து வெற்றியீட்டக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, தனித்து தேர்தல்களில் வெற்றியீட்ட எதிர்பார்க்க முடியாது எனவும் அவ்வாறு நினைத்தால் அது வெறும் கனவேயாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபுத்தி அமைப்பினால் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

இன்று தனித்து போவோம் என கூறும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிலருக்கு அப்போது எவ்வாறு வெற்றியீட்டப்பட்டது என்பது மறந்து விட்டது. தனியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தால் மட்டுமே இந்த விடயம் அவர்களுக்கு புரியும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேலை செய்யக் கூடிய ஒருவருக்கே எனது ஆதரவு வழங்கப்படும்.

எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், அவரது செயலாற்றக் கூடிய திறன் அடிப்படையிலேயே ஜனாதிபதி தேர்தலின் போது தாம் ஆதரவளிக்க போவதாக அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Latest Offers