கோத்தாவை எதிர்க்க இவரை களமிறக்குங்கள்! ரணில் தரப்பில் இருந்து எழுந்துள்ள குரல்...

Report Print Jeslin Jeslin in அரசியல்

பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய களமிறங்கும் போது அவரை எதிர்கொண்டு மக்கள் ஆதவைப் பெற்று ஆட்சிப்பீடத்தில் அமரக்கூடிய சக்தியை கொண்டிருக்கும் ஒரே நபர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே என அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கட்சியில் பல்வேறு தரப்பினரும் சஜித் பிரேமதாஸவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். சாதாரண பொதுமக்களும் அதனையே எதிர்பார்க்கின்றார்கள்.

இதனைவிடவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிலும் சரி, மத்திய செயற்குழுவிலும் சரி சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் முன்மொழியப்படவே இல்லை.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் குறித்து கலந்துரையாடப்படவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். மேலும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பெயர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு பேசப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers