சஜித் எமக்கு ஒரு சவாலே இல்லை! மகிந்த அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளராக ஆளுந்தரப்பில் இருந்து சஜித் பிரேமதாச களமிறங்கினாலும் என்னைப் பொறுத்த வரையில் அவர் எமக்கு சவாலே இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

ஆளுந்தரப்பில் பலர் வேட்பாளராக தம்மை காட்டிக்கொண்டு வருகின்றனர். எனக்கு தெரிந்தவகையில் ஆறு பேர்களின் பெயர்கள் பேசப்படுகின்றன.

அதில் மூவர் பிரதானமாக இருக்கின்றனர். சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் பிரதானமாக உள்ளனர்.

ஆனால் என்னை பொறுத்தவரையில் இந்த மூவரும் எமக்கு சவாலே இல்லை. மூவர் பற்றியும் நாங்கள் கவலை கொள்ளவில்லை.

இவர்களில் யார் வந்தாலும் நாங்கள் வெற்றியடைவோம். அதுதான் நாட்டின் இன்றைய நிலையாகும். மக்களுக்கு உணவில்லை. மக்கள் கடன்பட்டு வருகின்றனர். அனைத்தையும் அடகு வைத்து அவை வங்கிகளுக்கு சொந்தமாகிவிடுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers