மகிந்தவிடம் சென்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை பறிக்க மைத்திரி தரப்பு முடிவு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்குச் சென்றுள்ள அத்தனை பேருடையவும் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதிக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

கட்சியொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஒழுக்கம் முக்கியமானது. ஒரு கட்சியில் பாராளுமன்றத்தில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டு இன்னுமொரு கட்சிக்கு செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார வெல்கம பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டமைக்காக பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இன்று பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டதுபோல், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டால் என்ன நடந்திருக்கும் என்றார்.

Latest Offers