ராஜபக்சக்களுக்கு இரண்டாவது சுற்றிலும் தோல்வி காட்டப்படும்! ராஜித சேனாரட்ன

Report Print Kanmani in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச இல்லை அவரது தந்தையினாலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்சக்களை இரண்டாவது சுற்றிலும் தோற்கடிப்பது எப்படி என்பது காட்டப்படும்.

கட்சிக்குள் பிளவுகள் இருந்தாலும் அது பாரிய பிரச்சினை கிடையாது எனவும் அவற்றுக்கு உள்ளேயே தீர்வு காண முடியும்.

தாம் வெற்றியீட்டக் கூடிய ஓர் வேட்பாளரை மக்கள் முன்னிலையில் நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.