ஜனநாயகம் தொடர்பில் வெளிப்படையாக பேசும் ரணில்! செய்வது என்ன?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிசெய்துவிட்டதாக கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தான் அனைத்து தேர்தல்களையும் நடத்தாமல் இருக்கிறார் என ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

தேர்தல்களை காலந்தாழ்த்துவதன் ஊடாக அரசாங்கம் தமது ஏகாதிபத்திய நிர்வாகத்தின் வெளிப்பாடுகளை நிரூபணம் செய்கிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் ஜனநாயகத்தை உறுதிசெய்துவிட்டதாக கூறி வருகிறார்.

ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நடத்தப்பட வேண்டிய அனைத்து தேர்தல்களையும் நடத்தாமல் இருக்கிறார். இது ஏகாதிபத்திய ஆட்சியின் அடையாளங்களாக நாங்கள் கருதுகிறோம்.

இளம் சமுதாயத்திற்காக பேசுவதற்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்க இந்த அரசாங்கத்திற்கு விரும்பம் இல்லை என்றே தோன்றுகிறது என்றார்.

Latest Offers