வரலாற்று சாதனையில் மஹிந்த! பறிபோகும் முக்கிய பதவி

Report Print Vethu Vethu in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

ஒரு கட்சியில் உறுப்பினராகவும், மற்ற கட்சியின் தலைவராகவும் செயற்படுவதன் ஊடாக மஹிந்த சரித்திரத்தில் இணைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் என கடிதம் ஒன்றை நாடாளுமன்றத்திற்கு வழங்கியதன் மூலம் மஹிந்த ராஜபக்ச எதிர்கட்சி தலைவர் பதவி வகித்து வருகின்றார்.

இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார். அந்த ஆண்டில் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை மஹிந்த ஏற்றுக்கொண்டார். எனினும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சூழ்ச்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அந்த முயற்சி தோல்வியடைந்த பின்னர் மஹிந்த இவ்வாறான கடிதம் ஒன்றை வழங்கி எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றார்.

தற்போதைய சூழலில் மஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் ஆபத்து காணப்படுகிறது. ஒரு கட்சியின் உறுப்பினர் மற்றொரு கட்சியில் உறுப்புரிமை பெற்றுக்கொண்டால் அவரின் அனைத்து பதவி நிலைகளும் இல்லாமல் போகும் என்பது நடைமுறை.

இவ்வாறான சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த இழந்தால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் மஹிந்தவுக்கு கிடைக்காமல் போகும்.

அதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers