ஜனாதிபதி வேட்பாளர் மாற்றமடையும் அறிகுறி! கோத்தபாயவுக்கு பதிலாக வேறு ஒருவர்

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ பெயரிட்டாலும், அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுடன் இணைந்து உருவாக்கும் புதிய கூட்டணியில் அது மாற்றமடைய கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயாக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாராக கோத்தபாய பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளார் ஒருவரை பெயரிடும் போது இரண்டு தரப்பிற்கும் இடையில் கலந்துரையாடல் மேற்கொள்வது தடையல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில் எங்கள் கட்சி சார்பிலும் வேட்பாளர் ஒருவர் தீர்மானிக்கப்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers