சுதந்திரக் கட்சி - பொதுஜன முன்னணி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அடுத்த வாரம் முதல் மீண்டும்

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடரும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில் சுதந்திரக் கட்சி பங்கேற்கவில்லை என்ற போதிலும், கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மலர் மொட்டு தரப்புடன் நடைபெறவுள்ள எதிர்கால பேச்சுவார்த்தைகளின் போது தேர்தல்கள் குறித்து திட்டம் வகுக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அனைத்து இடதுசாரி கட்சிகளையும் ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Latest Offers