மீண்டும் ராஜபக்ஷர்கள் குடும்ப ஆட்சி ஏற்படும் சாத்தியம்

Report Print Vethu Vethu in அரசியல்

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாடு குறித்து கொழும்பு அரசியலில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ராஜபக்ஷ குடும்ப அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கான ஆரம்ப நிகழ்வாக நேற்றைய தேசிய மாநாடு அமைந்ததாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தனர்.

மஹிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச, சமல் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பின் வரிசையில் மஹிந்தவின் புதல்வர்களான, நாமல் ராஜபக்ச, யோசித ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் பலரும் அமர்ந்திருந்தனர்.

நேற்றைய மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை அறிவித்த மஹிந்த, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தான் களமிறங்கவுள்ளதாக அறிவித்தார்.

இரண்டு பேரும் இணைந்து நாட்டை ஆட்சி செய்வோம் என மஹிந்த அறிவித்திருந்தார். இதன்மூலம் குடும்ப ஆட்சியை நிறுவுவதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளதாக அரசியல் மட்டத்தில் பார்க்கப்படுகிறது.

கடந்த மஹிந்த ஆட்சியின் போது, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். நாட்டின் அதிகாரம் முழுவதும் அவர்களின் கைகளிலேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers