கோத்தபாயவின் பெயரில் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த குழப்பவாதி

Report Print Sujitha Sri in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்தும் பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் கோத்தபாய ராஜபக்சவின் பெயரால் நபரொருவர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் மக்களிடையே ஓர் குழப்பகரமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.

பசில் ராஜபக்சவின் வட மாகாணத்திற்கான இணைப்பாளர் என கூறி அபித்த என்ற பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நபரே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

யாழ். நகர பகுதியில் பாலர் பாடசாலை நடத்தி வரும் இவர் வடக்கை மையப்படுத்தி பல வியாபாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் கூட்டங்களுக்கு மக்களை அழைக்கும் போது பொருட்கள் தருவதாக கூறி அழைப்பு விடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இவரால் கோத்தபாயவிற்கு ஆதரவாக பிரசுரிக்கப்பட்ட முதல் பதாதையில் மிரட்டும் தொனியில் வாசகம் எழுதப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்

வடக்கு மக்கள் கோத்தபாயவிற்கு வாக்களித்தால் தான் அபிவிருத்தி என்பது போல் அர்த்தம் புலப்படுவதாகவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை தமிழ் பேச தெரியாத ஒருவர் பசிலின் வட மாகாணத்திற்கான உண்மையான இணைப்பாளரா? இவர் அவர்கள் அணியை சேர்ந்தவரா என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளதாகவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

Latest Offers