ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்? சூசகமாக அறிவித்த ரணில்

Report Print Sujitha Sri in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக்கள் வலுப்பெற்றுள்ள போதும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் இதுவரையில் எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்பதற்கான மாபெரும் நிகழ்வு இன்று பதுளையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் நிறைவுற்றுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் குறித்த இடத்தில் குவிந்துள்ளனர்.

பிற்பகல் நான்கு மணியளவில் அமைச்சர் சஜித் பிரேமதாச இவர்கள் முன்னிலையில் உரையாற்றவுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை இன்று முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ரணால, ஜல்தர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றுகையில், இலங்கையில் இருக்கக்கூடிய கிராம மக்களின் அதிலும் வீடு இல்லாமல் அவதியுறுபவர்களை அறிந்து அவர்களுக்கான வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அமைச்சர் சஜித் பிரேமதாச முன்னின்று செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

தனது தந்தையாரை போன்று 24 மணிநேரமும் மக்கள் சேவை செய்யக்கூடியவராக அமைச்சர் சஜித் பிரேமதாச திகழ்வதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இவ்வாறு புகழாரம் சூட்டி அவரே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என சூசகமாக அறிவித்துள்ளார் என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

Latest Offers