அரசியலில் மதத்தை கலப்பது ஒரு சுயநல நடவடிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் பிரத்தியேக வகுப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு தாம் ஆதரவளிப்பதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த யோசனை வரவேற்க்கத்தக்கது என கூறியுள்ளார்.

இதேவேளை மதமும் அரசியலும் இன்று இணைந்திருப்பதை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அத்துடன், அரசியலில் மதத்தை கலப்பது ஒரு சுயநல நடவடிக்கையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers