பதுளையில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அமைச்சர் சஜித்

Report Print Sujitha Sri in அரசியல்

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தை அமைச்சர் சஜித் பிரேமதாச வந்தடைந்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்பதற்கான மாபெரும் நிகழ்வொன்று பதுளையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர் சஜித்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் திரண்டுள்ளனர்.

இந்த நிகழ்விற்கு மதத்தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் வருகை தந்துள்ளனர்.

Latest Offers