சஜித்தை ஆதரிப்பதில் கூட்டமைப்பிற்குள் திடீர் குழப்பம்?

Report Print Sujitha Sri in அரசியல்

வீடு கொடுப்பதால் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அன்பழகி கஜேந்திரா எழுதிய இரண்டாவது நூலாகிய 'அமுதப் பிரவாகம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா மன்னார் மாவட்டத்தின் நகரசபை மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இன்று நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடயம் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வேட்பாளர்?

அதிலும் ஐக்கிய தேசியக் கட்சியில் யார் வேட்பாளர்? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் வேட்பாளர்? என்பது தான். அத்துடன் அந்த வேட்பாளர்களை ஆதரிக்கின்ற கட்சிகள் யாவை?

இது தொடர்பில் இன்று பல தரப்பாலும் கேட்கப்படுகிறது. தற்போது இரு நபர்களின் பெயர்கள் பேச்சுவழக்கில் இருக்கின்றன. அதில் ஒன்று சஜித் மற்றையது கோத்தபாய.

வீடு கொடுப்பதால் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடியாது. 25 வீடுகளை கட்டி விட்டு 30 பதாதைகளை வைக்கின்றது அரசியல் ரீதியான நிகழ்வு.

அத்துடன் சிங்கள மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதில் சஜித் பிரேமதாச முதன்மையானவர் என தெரிவித்துள்ளார்.

Latest Offers