பதுளையில் சஜித்துக்கு வரவேற்பு! ஐ.தே.கவுக்குள் வெடித்தது பூகம்பம்

Report Print Vethu Vethu in அரசியல்

அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக இன்று நடத்தப்பட்ட பாரிய பேரணி காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதுளையில் இன்று சஜித்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணி, அவரை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிக்கும் கூட்டமா என்பது தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பதுளையின் பல்வேறு பகுதிகளில் சஜித் வருகிறார் (சஜித் எனவா) என பாரிய போஸ்டர்களுடன் ஆதரவு பேரணி நடத்தப்பட்டிருந்தது.

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் நடத்தப்பட்ட பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் பேரணி குறித்து ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், சஜித் பிரேமதாச பதுளைக்கு வருவதாக கூறப்பட்டது. எமது பிரதேசத்துக்கு வருபவரை வரவேற்பது எனது பொறுப்பாகும். சஜித் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றார்கள். எனினும் அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரமேதாஸ போட்டியிடவுள்ளதாக ஆரம்ப சமிக்ஞையாக இந்த பேரணி அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யாரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் செய்யவில்லை.

இந்நிலையில் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் இன்றைய பேரணி நடத்தப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆதங்கள் வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers