நாட்டை சரி செய்யும் சவாலுக்கு தயார்: விஜித ஹேரத்

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டை சரி செய்யும் சவாலுக்கு தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

பொதுமக்களின் வாழ்வதற்கான சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு இரண்டு அரசாங்கங்களினாலும் முடியவில்லை. எனவே பச்சை மற்றும் நீலத் திருடர்கள் நாட்டுக்குத் தேவையில்லை என்றே மக்கள் கூறுகின்றனர்.

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்று சக்தியொன்று உருவாக்கப்பட வேண்டும். எதிர்வரும் 18ம் திகதி மற்று சக்தி பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Latest Offers