ஜனாதிபதி வேட்பாளர் யார்? சஜித் நாளை முக்கிய பேச்சு

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை இரவு 8 மணிக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணி சார்பில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என ஐ.தே.கவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டத்தையும், நாடாளுமன்றக் குழுவையும் ஒரே நேரத்தில் கூட்டுமாறும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் சஜித்தை நாளை இரவு அவர்கள் சந்திக்கவுள்ளனர்.

Latest Offers