மகிந்த குடும்பத்தின் மீதான வெறுப்பே தமிழ் மக்கள் மத்தியில் அதிகம்! எம்.ஏ.சுமந்திரன்

Report Print Kumar in அரசியல்

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரவேண்டுமாகவிருந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு அரசியல் அமைப்பு ஊடாக உறுதி செய்யப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் சிறப்புரையாற்றினார். அத்துடள், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ள ஆதரவினை விட மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தின் மீதான வெறுப்பு தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாகவுள்ளதாகவும் இதன்போது எம்.ஏசுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஒக்டோபர் புரட்சியின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைதியாக இருந்திருந்தால் அதனால் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களே எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த அரசாங்க காலத்தில் எதுவும் நடைபெறவில்லையென யாரும் கூறமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers