மகிந்த வெளியிட்டுள்ள அபத்தமான செய்தி! வெட்கப்படும் செயல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கை மற்றும் இலங்கையர்கள் ராஜபக்சவின் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து என்பதுதான் அவர் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அபத்தமான செய்தி என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மகிந்த ராஜபக்ச நேற்றைய தமது நிலைப்பாட்டை அறிவித்தார். கோத்தபாய ராஜபக்ச தான் தங்களின் ஜனாதிபதி வேட்பாளர் என்று மகிந்த வெளிப்படையாக அறிவித்த பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினர் கடுமையான கருத்துக்களை முன்வைத்துவருகின்றார்கள்.

இது தொடர்பில் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரஜா உரிமையே கேள்விக்குறியாகியுள்ள குற்றச்சாட்டுக்குரிய ஒருவர் எமது நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதையிட்டு நான் தனிப்பட்ட ரீதியில் வெட்கப்படுகிறேன்.

எனது சகோதரர்களில் ஒருவர் அடுத்த ஜனாதிபதி, நான்தான் அடுத்த பிரதமர். இன்னொரு சகோதரர் சபாநாயகர், நான்காவது சகோதரர்தான் நாட்டின்பொருளாதாரத்துக்கு பொறுப்பு என கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்த பின்னரும் மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

மகன் அடுத்த ஜனாதிபதி. அதன்படி இலங்கை மற்றும் இலங்கையர்கள் ராஜபக்சவின் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து என்பதுதான் அவர் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அபத்தமான செய்தி.

உண்மையை சொல்வதானால் மொத்த ராஜபக்ஷ குடும்பமும் ஊழலுக்கும் மக்களை அச்சுறுத்துவதற்கும் பேர் போனது. கோத்தபாயவை ஜனாதிபதியாக்கும் அவர்களது முயற்சி பெரும் தோல்வியை சந்திக்கும்.

அரசியல் என்பது ஒரு நீண்டதூர ஓட்டம். அது குறுந்தூர ஓட்டமல்ல. நீண்டதூர மரதன் ஓட்டத்தில் முதலில் ஓடுபவர் வெற்றிபெற மாட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers