கோத்தபாயவை வரவேற்கத் திரண்ட மக்கள்! ஆயிரக் கணக்கில் குவிந்த ஆதரவாளர்கள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஸ்ரீலங்க பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கான வரவேற்பினை அனுராதபுர மாவட்ட மக்கள் வழங்கியுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இன்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரம் புனித பூமிக்கு சென்றிருந்தார்.

இதன்போது அவர் முதலாவதாக ருவன்வெலி மஹா சேயாவிற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் அங்கு ஆயிரக் கணக்கில் கூடிய அவரது ஆதரவாளர்களும் மக்களும் கோத்தபாயவிற்கு அமோக வரவேற்பு அளித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு கூடுதலான ஆதரவுகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் கோத்தபாயவின் வரபினை பெரும்பான்மை தரப்பில் இருக்கும் மக்களில் அதிகளவானவர்கள் விரும்புகிறார்கள் என்னும் தோற்றப்பாட்டையும் மகிந்த தரப்பினர் தமக்கு சார்பான ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers