மஹிந்த தலைமையிலான குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரி!

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாமல் உட்பட 60 பேரின் உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவினால் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கான பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கு பதிலாக தேசிய பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள் தயார் நிலையில் உள்ளன.

இரண்டு பெயர் பட்டியல்களும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் தேர்தல்கள் ஆணையாளரிடம் ஒப்படைக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 95 சுதந்திர கட்சி உறுப்பினர்களில் 60 பேர் பொதுஜன பெரமுனவிற்கு சென்றுள்ளனர்.

வேறு கட்சியில் உறுப்புரிமை பெற்றால் தற்போது இருக்கும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு அந்த கட்சிக்கு அனுமதியுள்ளதுடன், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இரத்து செய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers