சஜித் பிரேமதாஸவின் பலவீனம்!

Report Print Vethu Vethu in அரசியல்

தனது பலவீனம் என்ன என்பதனை அமைச்சர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏழை ஒருவரை பார்க்கும் போது எனது மனதில் கவலை ஏற்படுகின்றது. வீடு ஒன்று இல்லாதவரை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக உள்ளது. அது எனது பலவீனமாகியுள்ளது.

அவர்களுக்கு சேவை செய்வதே எனது எதிர்பார்ப்பாகும். இதேவேளை, நான் வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் தந்தை பிரேமதாஸ ஏழை மக்களிடத்தில் மிகுந்த அன்பும் இரக்க சுபாவமும் கொண்டவர். அதே போல அமைச்சர் சஜித்தும் ஏழை மக்களிடத்தில் அதிக அன்புடனும் இரக்க சுபாவத்துடனும் இருக்கின்றார்.

இந்நிலையில், அரசியல் ரீதியில் அவர் பலசாலியாக இருப்பினும் அல்லலுறும் மக்களை பார்க்கும் போது ஏற்படும் கவலைகள் அவரை பலவீனப்படுத்துகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers