வெற்றிக்காக கோத்தாவின் பக்கம் நிற்கும் மைத்திரி!

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் பக்கத்திலேயே இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு தேவையான வகையில் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட முடியாது.

தயாசிறி கட்சியின் பொதுச் செயலாளர் கிடையாது, அவர் கட்சியின் பதில் பொதுச் செயலாளராவார்.

ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கான தீர்மானத்தை ஜனாதிபதியே எடுக்க வேண்டும்.

கோத்தபாயவின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே ஜனாதிபதி மைத்திரி கொண்டுள்ளார்.

இந்த விடயங்கள் பற்றி தயாசிறிக்கு போதியளவு தெளிவு கிடையாது. இதற்கு முன்னர் கட்சிகளில் உயர் பதவி வகித்திராத காரணத்தினால் தயாசிறி ஒழுக்காற்று நடவடிக்கைகள் பற்றி பேசுகின்றார் என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.