மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர!

Report Print Rakesh in அரசியல்

ஜே.வி.பி. தலைமையிலான 'தேசிய மக்கள் சக்தி' கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்கவே களமிறங்கவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 18ஆம் திகதி வெளியாகவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தேசிய மக்கள் சக்தி என்ற பாரிய கூட்டணியை ஜே.வி.பி. உருவாக்கியுள்ளது . பல சிவில் அமைப்புகள் இக்கூட்டணியில் சங்கமித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் முதலாவது தேசிய கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. இதன்போதே ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டு அது நிறைவேற்றப்படவுள்ளது.

Latest Offers