யாழில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்..? தேர்தல்கள் ஆணைக்குழு விடாப்பிடி

Report Print Rakesh in அரசியல்

மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத வலி.வடக்கின் 21 கிராம அலுவலர் பிரிவுகளையும் மீளாய்வுக்கு உட்படுத்தும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் சிறப்பு விண்ணப்பப் படிவம் ஊடாக தமது பதிவை மேற்கொள்ளமுடியும். இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவால் 2019ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் 30 ஆயிரம் பேர் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை இரண்டால் குறைவடையும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த காலங்களில் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை.

இந்த ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழு, மக்கள் மீளக்குடியமராத கிராம அலுவர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை நாட்டின் எந்தப் பாகத்திலிருந்தாலும், வெளிநாடுகளிலிருந்தாலும் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

இதற்காக சிறப்பு விண்ணப்பப் படிவமும் தேர்தல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசங்களில் மீளாய்வு மேற்கொள்ளவேண்டாம் என்ற கோரிக்கை பல தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டிருந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நேற்றைய கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தக் கிராம அலுவலர் பிரிவுகளை மீளாய்வுக்கு உட்படுத்துவது என்ற ஆணைக்குழுவின் முடிவில் மாற்றம் எதுவும் செய்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest Offers