சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு முக்கிய முடிவு! மகிழ்ச்சியில் கோத்தபாய

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு அமைய கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி என்பது சந்தேகமற்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான வேட்பாளரான அவரின் வெற்றிக்கு சுதந்திரக்கட்சி பாடுபடும்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கக் கூடாது என சிலர் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து, கட்சி என்ற வகையில் கட்சியின் மத்திய செயற்குழு கோத்தபாயவுக்கு ஆதரவளிப்பது என தீர்மானித்துள்ளது எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 50 லட்சம் வாக்குகளை பெற்றதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 15 லட்சம் வாக்குகளை பெற்றது.

இதனடிப்படையில், கோத்தபாய ராஜபக்சவுக்கு அந்த 15 வாக்குகள் கிடைக்கலாம் பொதுஜன பெரமுனவினர் எதிர்பார்த்துள்ளனர்.

Latest Offers

loading...