சஜித் 5ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றாரா என்பது சந்தேகம்

Report Print Steephen Steephen in அரசியல்

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட கம்உதாவ திட்டத்தை பிடித்து தொங்கி கொண்டிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாச, நாட்டில் கைத்தொழில் புரட்சியை ஏற்படுத்த தயாராக வருவது ஆச்சரியத்திற்குரியது அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் ஐரோப்பாவை மையமாக கொண்டு நடந்த கைத்தொழில் புரட்சி குறித்து தற்போதைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் பேசும் சஜித் பிரேமதாச, சாதாரண தரம் அல்லது 5 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாரா என்ற நியாயமான சந்தேகம் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மினுவங்கொடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளம் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்பார்த்தது 11 ஆம் திகதி நிறைவேறியது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்காக முதுகெலும்புள்ள ஜனாதிபதியை தெரிவு செய்ய காத்திருந்த மக்களுக்கு படை தலைவனை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் தான் நாங்கள் அனைவரும் அறிந்த கோத்தபாய ராஜபக்ச. கோத்தபாய ராஜபக்ச என்பவர் இந்த நாட்டின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்.

அதேபோல் ஒழுக்கமான அதிகாரி. அவரது தந்தை மாத்திரமல்லது, அவரது மூன்று சகோதரர்கள் இலங்கை அரசியலை புதிய பாதையில் இட்டுச்செல்ல பங்களிப்பை வழங்கிய கௌரவமான அரசியல்வாதிகள். அத்துடன் கோத்தபாய ராஜபக்ச என்பவர் தனக்கு வழங்கிய பணியை சரியாக செய்து முடித்த அதிகாரி.

தற்போது நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது. தேசிய பாதுகாப்பு பூஜ்ஜியமாகியுள்ளது. மறுபுறம் நாடு ஒழுக்கமில்லாத பாதாள உலகத்திடம் சிக்கியது. பட்டப்பகலில் கொலை செய்யும் கலாசாரம் உருவாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் முன்னேறி வந்த நாடு, கடைசியில், சோமாலியாவைவிட மோசமான நிலைமைக்கு சென்றுள்ளது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers