சுதந்திரக் கட்சியை அழிக்க இடமளிக்க போவதில்லை - துமிந்த திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி 2020ஆம் ஆண்டு ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாது என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவின்றி பொதுஜன பெரமுனவோ, ஐக்கிய தேசியக் கட்சியோ தமது ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க பொதுஜன பெரமுனவுக்கு இடமளிக்க போவதில்லை எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers