மட்டக்களப்பு - கிரானில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கருத்தரங்கு

Report Print Navoj in அரசியல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு - கிரான், றெஜி கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் இக்கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவுப்படுத்தி உரையாற்றியுள்ளார்.

அத்தோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏதும் செய்யவில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு முட்டுக் கொடுக்கின்றதா? போன்ற பொய் உரைகளின் உண்மைத்தன்மை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேத்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers