வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர்

Report Print Theesan in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக பிரதமர் இவ்விஜயத்தை மேற்கொள்கின்றார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்கள், அதன் உரிமையாளர்கள் மற்றும் அவற்றில் பணிபுரிபவர்களின் தகவல்கள் நேற்று பொலிஸாரினால் திரட்டப்பட்டுள்ளது.

இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமரின் பங்கேற்புடன் நாளை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.

சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பதற்கும், நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ளது

குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, நெதர்லாந்து துணைத்தூதுவர் ஈவா வான்வோசம், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.