கோத்தபாய எப்படி மக்களின் தலைவராக உருவாக முடியும்?

Report Print Kamel Kamel in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச எப்படி மக்களின் தலைவராக உருவாக முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோத்தபாய, அப்போதைய அமைச்சர்களுடனேயே சுமூகமாக பேசியது கிடையாது அவ்வாறான ஓர் பின்னணியில் மக்களுடன் சுமூகமாக பேசுவார் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட பேசுவாரா என்பது சந்தேகமே அதனை அவரிடம் எதிர்பார்க்க முடியாது.

அவர் ஓர் இராணுவ அதிகாரி, நிர்வாக அனுபவம் கொண்ட அதிகாரியே தவிர மக்களுக்கு நெருக்கமான அரசியல்வாதி கிடையாது.

வெற்றியின் பின்னர் ஒரு மாதத்துக்கு ஒரு தடவையேனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசுவதாக கோத்தபாயவிடம் உறுதிமொழி வாங்கியதன் பின்னரே ஆதரவளிக்கப்பட முடியும்.

அவ்வாறு இல்லையென்றால் அவரை பார்க்கச் சென்று கேட்களை உடைத்து சிறைக்குச் செல்ல நேரிடும்.

கோத்தபாயவிற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை.

அவ்வாறு தீர்மானித்தால் கோத்தபாயவுடனும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனும் தனித்தனியாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமென நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.