சஜித் பிரேமதாசவை விமர்சிக்கும் தேசிய சுதந்திர முன்னணி

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு எப்படி இருந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்தும், 60 ஆயிரம் இளைஞர், யுவதிகளை டயர் போட்டி எரித்து கொன்றும் தனக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

இதனை மூத்த பரம்பரையினர் மறக்கவில்லை எனவும் தனது தந்தை சென்ற வழியில் செல்ல போவதாக கூறும் சஜித் பிரேமதாச, தான் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், தந்தையின் வழிமுறையிலா தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பதுளையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச வறுமையை ஒழிப்பேன் என்ற வழமையான பேச்சில் இருந்து விலகி, நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தக உடன்படிக்கை போன்றவை பற்றி பேசினார்.

அவை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று முன்தினம் ஆற்றிய உரையின் பிரதி என நினைக்கும் வகையில் ஒரே மாதிரியானதாக இருந்தது.

நேற்று நாட்டுக்கு கெடுதியான வர்த்தக உடன்படிக்கைகளுக்கு இடமளிக்க மாட்டேன் எனக் கூறி சஜித் பிரேமதாச, தான் அமைச்சராக பதவி வகிக்கும் அரசாங்கம், சிங்கப்பூர- இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்ய வேண்டாம் என நிபுணர்கள், வர்த்தகர்கள், தொழில்சார் நிபுணர்கள் என அனைவரும் கோரி போதிலும் அது கைச்சாத்திடப்பட்டது. அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் போது சஜித் ஏன் அமைதியாக இருந்தார்.

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு உடன்படிக்கைகளை கையெழுத்திட இடமளிக்க மாட்டேன் என்றும் சஜித் கூறினார். அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கும் தெரியாமல், திருட்டுத்தனமாக அமெரிக்காவுடன் எக்ஸா, சோபா உடன்படிக்கைகளை கைச்சாத்திட தயாரான போது சஜித் என்ன செய்துக்கொண்டிருந்தார் என்ற கேள்வி நாட்டில் புத்தியுள்ள மக்களுக்கு எழும்.

நல்லாட்சியை கொண்டு வருவதாக கூறி ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க, நான்கரை வருடங்களில் நாட்டை கொண்டு சென்றுள்ள இடத்தை புதிதாக கூற வேண்டியதில்லை. ரணில் விக்ரமசிங்கவை போல், பொறுப்புக் கூற வேண்டிய கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச புத்தரின் அரச போதனைக்கு அமைய ஆட்சி செய்ய போவதாக கூறுகிறார். பௌத்த சமயத்தில் உள்ள உன்னதமான எண்ணக்கருக்களை இவ்வாறு அவமதிப்பது முஸ்லிம் என்றாலும் நான் கடுமையாக கண்டிக்கின்றேன்.

அதேவேளை 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்திய வேட்பாளரை ஆதரித்தது. மக்களிடம் ஏற்பட்ட கடும் அதிருப்திய காரணமாக தற்போது தனியாக வேட்பாளரை நிறுத்த தயாராகி வருகிறது.

எனினும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் இடையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளிடம் பொய்யான சில நிபந்தனைகளை முன்வைத்து விட்டு, போட்டியில் இருந்து விலகுவது இறுதி காட்சியாக இருக்கும் என மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டு்ளளார்.

Latest Offers