கோத்தபாயவிடம் சரியான கொள்கை இருக்கின்றது: திஸ்ஸ விதாரண

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு சரியான கொள்கை இருப்பதாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளே நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு காரணமாக இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளில் இருந்து நாட்டை விடுவித்து, பொருத்தமான தலைமையின் ஊடாக தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

இந்த பயணத்திற்காக சிறந்த உதவி பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாட்டின் மூலம் கிடைத்துள்ளது எனவும் திஸ்ஸ விதாராண குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers