கோத்தபாய பலவீனமான வேட்பாளர்: விஜித ஹேரத்

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜபக்ச அணியினர் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பலவீனமான வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எனவும் அவர் தமக்கு சவால் அல்ல எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என மாநாயக்க தேரர்கள் ஏனைய மதத் தலைவர்கள் முன்வைத்துள்ள தகுதிகளின் எந்த தகுதியும் கோத்தபாயவுக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச என்பவர், நிதி ஒழுக்கம், நிர்வாக ஒழுக்கம் என்ற எதுவும் இல்லாத, தான்தோன்றி தனமாக வேலை செய்யும் தலைவர் என்பதை அவர் வரலாற்றில் நிரூபித்துள்ளார்.

வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள் மற்றும் வழக்கு இருப்பவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டாம் என மதத் தலைவர்கள் கோரியிருந்தனர். வழக்குகள், குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், கோத்தபாயவுக்கு போட்டியிட தகுதியில்லை.

பல தசாப்தங்கள நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எமது பொருளாதாரத்தை பலவீனப்படுத்தினர். வெளிநாட்டு கடனை நாளுக்கு நாள் அதிகரித்தனர்.

ராஜபக்ச ஆட்சியின் கீழ் 7 ஆயிரம் பில்லியனாக இருந்த வெளிநாட்டு கடன் தற்போது 12 ஆயிரம் பில்லியனாக அதிகரித்துள்ளது.

கலாசாரத்தை சீரழித்தனர். தேசிய ஐக்கியத்தை சிதைத்தனர். இனலவாத மோதல்களை ஏற்படுத்தியுடன் பொது பாதுகாப்பை பலவீனப்படுத்தினர்.

இரண்டு பிரதான அணிகளையும் ஒன்றாக வைத்து தோற்கடிக்க கூடி ய மாற்று அணிக்கு சமூகத்தில் வாய்ப்புள்ளது. சமூகம் இப்படியான ஒன்றையே கோருகிறது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers