கோத்தாவின் வருகையால் மட்டற்ற மகிழ்ச்சியில் கருணா அம்மான்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக களமிறங்குகிறார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் தானும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் அச்சமடைந்திருந்த வடக்கு, கிழக்கு மக்கள், கோத்தபாய போட்டியிடும் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதனால்தான் வடக்கு கிழக்கில் வெடிகொளுத்தினார்கள்.

நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளிப்பவரிற்கே வாக்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.