சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்: நவீன் திசாநாயக்க

Report Print Ajith Ajith in அரசியல்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய தமிழ் மக்களுக்கு நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தான் தனிப்பட்ட ரீதியில் நம்புவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் நாடு மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers