கோத்தபாய தொடர்பில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பில் மீண்டும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

அவரின் அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலின் உண்மைத்தன்மை தொடர்பில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் அரசசார்பற்ற அமைப்பின் பிரதானிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய அமெரிக்க தூதரகத்திடம் இந்த நபர்கள் வினவிய போதிலும், தூதரக பேச்சாளர் நென்சிச மென்கொரின் பதிலளிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நபரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கு அமெரிக்க சட்டத்தில் இடமில்லை என்பதை காரணம் காட்டி, மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்தாகியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் அரசசார்பற்ற அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் அமெரிக்க தூதரகத்திடம் விளக்கம் கேட்கும் அதிகாரம் பொலிஸாரிடம் இல்லை என பொலிஸ் உயர் மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை - அமெரிக்க குடியுரிமையை கொண்ட கோத்தபாய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என பல தரப்பினராலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கோத்தபாயவின் குடியுரிமை பிரச்சினை மீண்டும் கொழும்பு அரசியல் மட்டத்தில் பேசும் விடயமாக மாறியுள்ளது.