எமது வேட்பாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் வேட்பாளர் அல்ல: கபீர் ஹாசீம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நீதிமன்றத்திலேயோ மக்கள் மன்றத்திலேயோ குற்றச்சாட்டை எதிர்நோக்கியவர் அல்ல என அந்த கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இப்படியான நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும் என கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் கபீர் ஹாசிம், தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், ஜனநாயக முறையில் விரைவில் தெரிவு செய்யப்படுவார் எனவும் அதன் பின்னர் மக்களுக்கு வேட்பாளர் குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்யும் வேட்பாளர் எதிர்கால சந்ததியை புதிய உலகத்திற்கு கொண்டு செல்லக் கூடிய, வறியவர்களிின் துன்பங்களை அறிந்த, படித்த நபர் எனவும் நாட்டின் சட்டத்தை மதிக்கும், அதனை பின்பற்றும் நபராக இருப்பார் எனவும் அமைச்சர் ஹாசிம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Latest Offers