முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிச்சயாமக ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்றிரவு அலவத்துகொட பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச நிச்சயமாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
தகுதியானவருக்கு தகுதியான இடம் கிடைத்துள்ளது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இது சரியானது எனவும் கெஹலிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்யக் கூடியவர் யார் என்பது சரத் பொன்சேகாவிற்கு நன்கு தெரியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.