கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து தவறான வழியை தேர்வு செய்த மகிந்த!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அமெரிக்க பிரஜையான தனது சகோதரரை அந்த புதிய கட்சியின் ஜனாதபதி வேட்பாளராகவும் அறிவித்துள்ளார். இது நாட்டின் சட்டத்துக்கு புறம்பானதும் மக்களை தவறான வழியில் கொண்டுச் செல்வதுமாகவே காணப்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாரளாக மகிந்த அறிவித்துள்ளமை தொடர்பில் இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சட்டத்திற்கு முரணாக இரு கட்சிகளில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டது மாத்திரமன்றி அமெரிக்க பிரஜையான தனது சகோதரனை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ நாட்டை தவறான வழிநடத்தலில் கொண்டு செல்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பிரதிநிதியாகவே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

மறுப்புறம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராக இருந்துக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற பெயரில் தமது சகோதரர்களுடன் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கி கடந்த ஞாயிற்று கிழமை அந்த கட்சியின் தலைமைத்துவத்தையும் பொறுப்பேற்று கொண்டார்.

சுதந்திர கட்சியின் யாப்பை மீறி இவ்வாறு செயற்படும் மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் சட்ட ஆட்சியை எவ்வாறு பாதுகாப்பார் என்ற கேள்வி எழுகிறது.

அதேபோன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு பிரதிவாதியாக இருக்கும் அமெரிக்க பிரஜையான தனது சகோதரரை அந்த புதிய கட்சியின் ஜனாதபதி வேட்பாளராகவும் அறிவித்துள்ளார். இது நாட்டின் சட்டத்துக்கு புறம்பானதும் மக்களை தவறான வழியில் கொண்டுச் செல்வதுமாகவே காணப்படுகின்றது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers